இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று (24)நடைபெற்றது.
இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஷ்வத் மாரிமுத்து உள்பட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்வில், இப்படத்திற்கு தர்மன் எனப் பெயரிட்டுள்ளதை அறிவித்தனர்.
தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது, “பேச அழைக்கிறோம் எனச் சொன்னலே தயக்கமாக இருக்கிறது. காரணம், நான் பேசினால் மற்றவர்களுக்கும் பிரச்னை, எனக்கும் பிரச்னை. ஏதாவது கிளப்பிக்கொண்டே இருப்பார்கள்.
நான் சும்மா இருந்தால் இவர் என்ன பேசவே மாட்டேன் என்கிறார்? வாயில் என்ன கொழுக்கட்டை வைத்திருக்கிறாரா? என்பார்கள். பேசினால், “ஆமாம், இப்ப பேசு” எனக் கிண்டல் அடிப்பார்கள்.
ரொம்ப நாள் கழித்துதான் ஒன்றைத் தெரிந்துகொண்டேன், நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது; நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம். என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பாகி வருகிறது!
