துபாயில் வீதியின் நடுவே நின்றுகொண்டிருந்த லொறியின் பின்புறத்தில் சிறிய பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்தியப் பணியாளர்கள் எழுவர் உயிரிழந்ததுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு,முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றாததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என துபாய் போக்குவரத்து பொலிஸ் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
விபத்து தொடர்பில் துபாயிலுள்ள இந்திய தூதரகம் தங்களது எக்ஸ் (X) தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள நிலையில், வைத்தியசாலைக்கு நேரில் சென்று காயமடைந்த இந்தியர்களைச் சந்தித்து நலம் விசாரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
