தமிழ் பெண்கள், புதிய திசையை நோக்கிப் பயணிக்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மலையகத் தமிழ்ப் பெண்கள் எதிர ;காலத்தில ; சகலதுறைகளிலும் கால்பதிக்க செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
முன்னைய காலங்களில ; “அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என பெண்கள் கல்வி கறக பல தரப்பினர்களாலும் அனுமதிக்கப்படாத வர்களாக ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்வதற ;கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். ஆனால் இணைய யுகம் என வர்ணிக்கப்படும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில ; பெண்கள் பல துறைகளிலும் ஈடுபட்டு தமது திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைப்பவர்களாக உயர்ந்துள்ளமை பெருமை கொள்ளச் செய்கிறது.
இந்து மகா சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் நமது தாய்த்திருநாடாம் இலங்கை உலகத்திலேயே முதலாவது பெண் பிரதமராக ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவையும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதியாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை யும் உருவாக்கிய நாடாக சாதனை படைத்துள்ளது.
இன்று பெண்கள் தாம் எந்த விதததிலும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்கள். ஆசிரியர்கள், அதிபர்கள், கலவிப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்கள், அமைச்சர்கள் எனப்பல
துறைகளிலும் பெண்கள் பிரகாசிப்பதை காணக்கூடியதாக உளளது.
இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களில் இரு சாரார் உள்ளார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள் இலங்கை தமிழர்கள் எனவும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும்
தமிழ் மக்கள ; இந்திய வம்சாவளி தமிழர்கள எனவும்
அழைக்கப்படுகிறார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கி பல துறைகளிலும் பிரகாசிப்பவர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்களின் குடியுரிமை இந்த நாடு சுதந்திரம் அடைந்த பின்பு பதவிக்கு வந்த அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை மூலம்
பறிக்கப்பட் டதனால் அந்த மக்களுக்கு பல துறைகளிலும் பிரகாசிக்கக் கூடிய வாய்ப்பு கிட்டவில்லை. குடியுரிமை வழஙகப்கப்பட்டதன் பின்பு அவர்கள் படிப்படியாக பல துறைகளிலும் பிரகாசித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த நாட்டில் இந்திய வம்சாவளி தமிழர்களான வேலம்மாள் செல்லச்சாமி, அனுஷியா சிவராஜா, சரஸ்வதி சிவகுரு ஆகிய பெண்கள் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகித் தார்கள்.
தற்போது இந்திய வம்சாவளி தமிழ் பெண்கள ; வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்களாக நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக, ஊடகவியலாளர்களாக பரிணமித்து சாதனை படைத்து வருகிறார்கள்
இந்த நாட்டின ; பத்தாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாக களமிறங்கிய
மூன்று மலையகப் பெண்கள் அந்தத் தேர்தலில் வெற்றியீட ;டி பாராளுமன்ற அங்கத்தவர்களாகி வரலாறு படைத்துள்ளார்கள்.
முன்னைய காலங்களில் மட்டக்களப்பு மாவட ;டத்திலிருந்து தங்கேஸ்வரி,
வடக்கில் இருந்து இராஜமனோகரி புலேந்திரன், பத்மினி
சிதம்பரநாதன், விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பாராளுமன்ற அங்
கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டதோடு அவர்களில் இராஜமனோகரி புலேந்திரன் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் விஜயகலா மகேஸ்வரன் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராகவும் அதன் பின்பு கல்வி இராஜாங்க அமைச்சராகவும்
பதவி வகித்தார்.
திருமதீ பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வடமாகாண ஆளுநராக பதவி வகித்தது
திறமையாக செயல்பட்டதன் மூலம் தான் எந்தவிதத்திலும் ஆண்க ளுக்கு சளைத்தவர் அல்லர் என்பதை பறைசாற்றியமை குறிப்பிடத்தக்கது.
பத்தாவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின்
திசைகாட்டி சின்னத்தில் போடடியிட்டு வெற்றியீட்டிய மூன்று மலையக தமிழ் பெண்கள் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக பாராறுமன்ற அங்கத்தவர்களாக உள்ளார்கள். இவர்களில் மாத்தறை மாவட்டத்தில் போட ;டியிட்ட சரோஜா சாவித்திரி போல ;ராஜ் 148, 379 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியமையினால் தேசிய மக்கள ; சக்தி அரசாங்க்கத்தில் மகளில் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவி வசிக்கிறார். இவர் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் இருபத்திரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அமைப்பின் தலைவராக பதவி வகிப்பதோடு
தனது அமைச்சில் சிறுவர் பணியகம் (109), பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான தேசிய சேவை (1938) இலங்கை கணினி அவசர ஆபத்து அணி (101) என மூன்று தனித்தனி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை அனைத்து இன
மாணவர்க்கும் ஒரே பாடத்திட்டத்தை உருவாக்கச் செய்து 2026 ஜனவரி மாதத்தில் இருந்து அந்த பாடத்திட்டப்படி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி கற்பித்தலை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
சிங்களம், ஆங்கிலம், ஆகிய மும்மொழிகளிலும் புலமை கொண்டவர். இந்த புலமையைக் கொண்டு தன்னால் சிற்ந்த முறையில் சேவை செய்ய முடியும் என்பதை பறை சாற்றியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் நுவரெலியா பீட்ரூ தோட்டத்தில் தேயிலை நிலைய உத்தியோகத்தராகவும் அந்த தோட்டத்திற்கு வருகை தரும் உல்லாச பிரயாணிகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுவதோடு தேயிலை பதனிடும் அறையின் செயல்பாடுகள் பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவாக எடுத்துரைப்பவராக சிவகவி கலைவாணி செயல்படுகிறார்.
இந்த நாட்டின் பல பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில ; வெளி
நாட்டவர்கள் மாத்திரமல்ல உள்நாட்டவர்களும் உள்ளார்கள். எனவே சுற்றுவாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாக திகழ ஆங்கிலம், சிங்களம்ஈ தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் புலமை அத்தியாவசியம்
எதிர்காலத்தில் சிவகவி கலைவாணியைப் போன்று மலையகத் தமிழ் பெண்கள் உருவாக வேண்டும். தான் சார்ந்த சமூகத்திற்கு பெருமை சேர்க்க முன் வரவேண்டும்.
மகளிர் தினமான இன்று தமிழ் பெண்கள், புதிய திசையை நோக்கி பயணிக்க தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
சி. ப. சீலன்
