நாவலபிட்டி பகுதியில் இன்று மதியம் பெய்த கன மழையால் நாவலப்பிட்டி நகரில் மழை நீர் புகுந்தது.
இதனால் நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் 18 அங்குல உயரம் வரை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
மேலும் கண்டி கம்பளை வீதியிலும் மழை நீர் புகுந்துள்ளது இதன் காரணமாக பாதசாரிகள் பாரிய அளவில் அசௌகரியத்தை எதிர் நோக்கினர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


