லெனாட்ஸ் தொழிலாளரின் உழைப்பு ஒரே நாளில் சிதறிய சோகம் முழு மலையத்தையும் ஆட்கொண்டுள்ளரது.
தோட்டத்தை உருவாக்கி; தேயிலைக்கே உரமாகிச் செத்துப்போன பரம்பரையின் கண்ணீரைத் துடைக்க, ஒரு நாதியும் இல்லையே என்ற மனத்தாக்கம் விவரிக்க முடியாதது.
உடபுசல்லாவை லெனாட்ஸ் தொழிலாளரின் உழைப்பு மக்களின் தலையெழுத்து ஒரே, நாளில் இப்படி மாறும் என யார் நினைத்தது?
இப்போது வந்து, அப்படிச் செய்திருக்கலாம்; இப்படிச் செய்திருக்கலாம் என்றும் உண்மை நிலை தங்களுக்குத் தெரியும் என்றும் வியாக்கியானம் பேசுவதற்கு ஆயிரம் போராளிகள் வருகிறார்கள்.
‘தோட்டமே எங்கள் மூச்சு!’ ‘மலையகமே எங்கள் தாயகம்’ என்றெல்லாம் புரட்சி பேசும் இளையோரே, இது உங்களுக்கான சாட்டை!
இதையும் படியுங்கள்: சென் லெனாட்ஸ் தோட்ட மக்கள் திடீரென வெளியேற்றம்
புத்தி பேதலித்து எதிர்காலத்தைக் கோட்டை விட்டுவிடாதீர் என்பதற்கான ஓர் எச்சரிக்கை!
வீண் விமர்சனங்களைத் தவிர்த்து அறிவுபூர்வமாகச் சிந்திக்க இஃது ஓர் அரிய சந்தர்ப்பம்! வீடிழந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு, ஒரு தாழ்வாரம் எங்காவது கிடைக்கட்டும்! வாழ்க தேயிலை தேசம்!
