லிந்துலையில் காணாமற்போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, அக்கரகந்தை (ஹோல்டிரிம்) ஆக்ரா ஆற்றில் மூழ்கி காணாமல்போன சிறுவனை தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டபோது சடலம் மீட்கப்பட்டது.
ஆற்றுக்கு சென்ற மாணவர்களில் ஒருவர், நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போனார்.தரம் 10 இல் கல்வி பயிலும் பரமானந்தன் கிசோக் என்ற மாணவரே இவ்வாறு காணாமல்போனார்.
மீன் தொட்டிலுக்கு போடுவதற்காக கற்களைச் சேகரித்துவிட்டு மாணவர்கள் ஆற்றில் இறங்கி நீராடிக் கொண்டிருந்த போது, இந்த மாணவன் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க: மிளகுசேனை மாணவனைத் தேடும் முயற்சி தோல்வி
இதனையடுத்து லிந்துலை பொலிஸாரும், உள்ளூர் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து நேற்று மாலை முதல் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தமையால் நேற்றைய தேடுதல் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இன்று சுழியோடிகளும் வந்து, இரண்டாவது நாளாக தேடுதல் நடவக்கை இடம்பெற்றபோது லிந்துலையில் காணாமற்போன மாணவன் சடலமாக மீட்கப்படார்.
பிரதேச மக்கள், பொலிஸாரின் ஒத்துழைப்போடு சுழியோடிகள் இன்று பிற்பகல் 1.30 அளவில் மீட்டெடுத்துள்ளனர்.
கௌசல்யா
