மிளகுசேனை மாணவனைத் தேடும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் இன்று (14) இரண்டாவது நாளாகவும் தேடும் பணி தொடர்கிறது.
லிந்துலை, அக்கரகந்தை (ஹோல்டிரிம்) ஆக்ரா ஆற்றில் மூழ்கிக் காணாமல்போன சிறுவனைத் தேடும் பணி இன்று (14) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
ஆற்றுக்குச் சென்ற மாணவர்களில் ஒருவர், நேற்று மாலை நீரில் மூழ்கி காணாமல்போனார். தரம் 10 இல் கல்வி பயிலும் பரமானந்தன் கிசோர் என்ற மாணவரே இவ்வாறு காணாமல்போனார்.
மீன் தொட்டிலுக்குப் போடுவதற்காகக் கற்களைச் சேகரித்துவிட்டு, மாணவர்கள் ஆற்றில் இறங்கி நீராடிக் கொண்டிருந்த போது, இந்த மாணவன் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி, நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க: லிந்தலை ஓல்டரின் ஆற்றில் நீராடிய மாணவன் மாயம்
இதனையடுத்து லிந்துலை பொலிஸாரும், உள்ளூர் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்து நேற்று மாலை முதல் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எனினும், ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தமையால் மிளகுசேனை மாணவனைத் தேடும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இன்று சுழியோடிகளும் வந்து, இரண்டாவது நாளாகத் தேடுதல் நடவக்கை இடம்பெறுகின்றது.
கௌசல்யா
