கடந்த தித்துவா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக இருந்த, லிந்துலை – மெராயா நகர வீதி இன்று (16)சிரமதானப் பணி ஊடாக திருத்தம் செய்யப்பட்டது.
மெராயா நகர ஜெயம் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், மெராயா நகர வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து இந்தத் திருத்தப் பணிகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா



