நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது.
இதனால் இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான ஆறுகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பெரும்பாலானதாழ் நிலங்கள் வெள்ள நீரினால் நிரம்பிக் காணப்படுகின்றன.
குறிப்பாக கரங்கொடை, எலபாத்தை, திமியாவை ஆகிய தாழ் பகுதிகள் வெள்ள நீரினால் நிரம்பிக் காணப்படுகின்றன..
இது இவ்வாறிருக்க இம்மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் அதிகமாகி இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை, இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவலை எலகொடை கந்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இப்பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மண்சரிவு ஏற்பட்ட இடத்திலேயே மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ். ஆர். இரவீந்திரன்- இரத்தினபுரி


