மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க பிரதேச சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இன்று (10) காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், அதன் செயலாளர் எஸ் ராஜவீரன் தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இடம் பெற்றது.
இதில் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் எம்.எஸ்.ஈர்ஜாட் வழிகாட்டலில் பொதுச் சுகாதார அதிகாரிகள், மவுஸ்சாகலை இராணுவ முகாம் அதிகாரி, சிப்பாய்கள், மஸ்கெலியா பொலிஸ் உத்தியோகத்தர்கள்



மஸ்கெலியா பிரதேச சபையின் சுகாதார பிரிவு அதிகாரி, சுற்றுச்சூழல் அதிகாரி புரவுண்ளோ தோட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரச நிறுவனங்கள், மஸ்கெலியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் உள்ளடக்கிய பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இதையும் படியுங்கள்: கிலண்டில் தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்பு
அப்போது மஸ்கெலியா நகரில் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் இருந்த பாடசாலைகள், அரச நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்பனவற்றில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
கடந்த சில நாள்களாக இப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நுளம்புகள் பெருகுவதை தடுக்கும் வகையில் அடிக்கடி இவ்வாறான சோதனைகள் நடத்தப்படுகின்றன.
நுளம்புகள் பெருகும் வகையில் வைத்து இருப்போர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
