லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் 4 ஆவது மேஜர் லீக் ரி20 கிரிக்கெட் தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் ,வோஷிங்டன் ப்ரீடம், லொஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதில், வொஷிங்டன் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வொஷிங்டன் அணி பந்துவீச்சைத் தெரிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய லொஸ் ஏஞ்சல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஆண்ட்ரே பிளட்சர் அதிகபட்சமாக 59 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ஆர்ஜன்டினாவை எதர்கொள்ளும் சுவிஸ் அணி
இதேவேளை, 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வொஷிங்டன் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
பந்துவீச்சில் அந்த அணியின் ஆண்ட்ரே ரசல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
