மஸ்கெலியா நகரில் பாரிய நிலம் தாழ் இறங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது?
மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் ஆலய வீதியில் பாரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது .
கடந்த சில ஆண்டுகளாக அவ்வீதியில் சிறிதளவு இருந்த வெடிப்பு தற்போது சற்றுப் பெரியதாக உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட நுவரெலியா மாவட்ட புவி ஆய்வாளர்கள் உடன் நடவடிக்கை எடுத்துச் சரியான நிலவரத்தை விளக்க வேண்டும். இல்லையெனில் மஸ்கெலியா நகரில் பாரிய அளவில் நிலம் தாழ் இறக்கம் ஏற்பட்டும்.
முறையாக மஸ்கெலியா பிரதேச சபை, மஸ்கெலியா பொலிசார், நோர்வூட் பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுல சுரவீர ஆராய்ச்சி, கிருஷ்ணன் கலைச் செல்வி, ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


