புசல்லாவை நுவரெலியா வீதியில் இரட்டைப் பாதை நகரில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வகுகபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பளையிலிருந்து புஸ்ஸல்லாவையை நோக்கிச் சென்ற சட்டத்தரணி ஒருவரின் கார் இரட்டைபாதை நகரிலுள்ள மரக்கறி கடைக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவர் காயமடைந்து வியாபார நிலையம் சிறிதளவில் பாதிக்கப்பட்டது.மரக்கறிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புசல்லாவை பொலிசார் தெரிவித்தனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



