ஓட்டோ சாரதிகளுக்கு மாத்திரம் விசேட வயது வரம்பை நியமிக்காமல், பொதுப் போக்குவரத்துத் துறை ஓட்டுநர்களின் வயதெல்லையை 23 ஆக நிர்ணயிக்குமாறு அகில இலங்கை ஓட்டோ ஓட்டுநர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, ஓட்டோ சாரதிகளின் வயதை 40 ஆக அதிகரிக்க எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 23 வயதைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.
எனவே, முச்சக்கர வண்டிகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்காமல், ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கும் 23 என்ற வயதெல்லையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டோ சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகரா தெரிவித்துள்ளார். (மலைக்குருவி)
