அமெரிக்காவின் பிரபல நாட்டுப்புற இசைப் பாடகி டொலி பார்டன் (Dolly Parton) தனது 80ஆவது வயதில் காலமானார்.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த இவரது இசைப் பயணத்தில், உலகளவில் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகளை (Records) விற்பனை செய்து அவர் சாதனை படைத்துள்ளார். 3,000 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் உலகின் முன்னணி இசைக்கலைஞராக உயர்ந்தவர். ஏராளமான கிராமி (Grammy) விருதுகளையும் வென்றுள்ளார்.
சிறந்த பாடகி, பாடலாசிரியர்,நடிகை மட்டுமல்லாமல், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் கல்வி,சமூக நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இவரது மறைவு உலக இசைத்துறைக்கு ஒரு மாபெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
