பெற்றோர் கேள்வி கேட்டால் அவர்கள் மீது அவதூறு பரப்பும் ஆசிரியர்கள் குறித்து பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஒரு பாடசாலையில், மாணவர்களை இரவு வேளையில் பாடசாலையில் தங்க வைத்து கல்வி கற்பிக்கவும், அதற்காக கட்டணம் அறவிடப்படவுள்ளதாகவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து. இந்த விடயம் குறித்து நியாயமான கேள்விகளை எழுப்பிய பெற்றோர் ஒருவரை இலக்காகக் கொண்டு, அவருக்கு எதிராக அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்த மாணவனின் தாயாரின் புகைப்படத்தை அதே பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, அவரைப் பற்றிய தவறான கருத்துக்களை பரப்பியுள்ளார், மேலும் பாடசாலை அபிவிருத்திச் சங்க (SDC) கூட்டத்திலும் தனது கைப்பேசியில் அந்தப் புகைப்படத்தை காட்டி அவதூறாக பேசியுள்ளார்.
தோட்டப் பெண்களுக்கு குரங்குகள் தொல்லை
தம் பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கேள்வி கேட்டால் அவர்களைத் தவறாகப் பேசும் இவ்வாறான செயல்கள் ஆசிரியர் தொழிலின் ஒழுக்கநெறிகளுக்கும், பெற்றோரின் தனியுரிமைக்கும், கண்ணியத்திற்கும் எதிரான மிகவும் கவலைக்குரியனவாகும்.
இவை வெறும் ஒரு பெற்றோரின் பிரச்சினை அன்று. நாளை எந்தப் பெற்றோருக்கும் இது நிகழலாம். கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பரஸ்பர மரியாதை நிலவ வேண்டுமெனில், பெற்றோரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்; அவர்களை இலக்காகக் கொண்டு அழுத்தம் கொடுக்கக் கூடாது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலைகள் கருத்து வேறுபாடுகளை உரையாடல் மூலம் தீர்க்க வேண்டிய இடங்களாக இருக்க வேண்டும்; கேள்வி கேட்கும் பெற்றோர்களை இலக்காகக் கொண்டு அவதூறு பரப்பும் இடங்களாக அல்ல.
