பிரான்ஸ் பூங்காவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன் – மரணத்தில் மர்மம்; போதைப்பொருள் கலந்த குளிர்பானமா?
பிரான்ஸில் உள்ள பூங்கா ஒன்றில் 28 வயதுடைய தமிழ் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளமான TikTok-இல் “கொக்கி குமார்” என்ற பெயரில் அறியப்பட்ட அழகேந்திரராஜா சஜித் (28) என்பவரே உயிரிழந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. எனினும், விசாரணைகளின் போது அவர் அருந்தியதாகக் கூறப்படும் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
இதுகுறித்த உண்மை நிலை, பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகிய பின்னரே உறுதிப்படுத்தப்படும் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய பிரான்ஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா
