பாக்கியம் தேசிய கல்லூரி மாணவிகள் தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (11) நடைபெற்ற மாகாண மட்ட தமிழ் மொழித் தினப் போட்டியில் மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி மாணவிகள் குழு இசைப் பிரிவு – 2 இல் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளனர்.
இப்போட்டியில், நேஷ்மிதா,ஹருஷிகா,திஷ்மிகா,ஜெயதாரிகா,பர்ஸானா,
கிஷானி,ஹர்ஷிதா,எலிஷா லோரா,எமி அஞ்சலி மேருக்ஷா ஆகிய மாணவிகளே
போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்கலாம்: பேராசிரியர் துரைராஜா நினைவு தலைமைத்துவ சவால்
போட்டியில் வெற்றியீட்டிய மாணவிகளுக்கும் , பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது.
தமிழ் மொழித்தின போட்டிகள் மத்திய மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் பெ. விகனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம.நவநீதன்
