மத்திய மாகாணத்தின் புசல்லாவையைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் மலையக நட்சத்திரக் கலைப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா புசல்லாவை Paris Reception மண்டபத்தில் பேரவையின் செயலாளரும் கலைஞருமான மருதமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரவையின் தலைவர் கலாபூசணம் மலையக வாசுதேவன் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம். அன்பழகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
1996 இல் ஸ்தாபிக்கப்பட்ட இப்பேரவை சமூக மேடை நாடகங்கள், வீதி நாடகங்கள், இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடுகள், நடன நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், சமூக சேவைகள் போன்ற விழாக்களையும் நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் நாடகங்களை அரங்கேற்றிப் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இவ்வமைப்பின் தலைவராக முப்பது வருடங்களாகத் தலைமை தாங்கி வரும் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர் மலையக வாசுதேவனுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான கலாபூஷணம் விருது கடந்த 2026 .01. 12 ஆம் திகதி கொழும்பு அலரி மாளிகையில் கலாசார அலுவல்கள் அமைச்சினால் வழங்கப் பட்டது..
இவருக்கான கௌரவிப்பு நிகழ்ச்சியும் வரவேற்பும் கலைஞர் மொகமட் கனிக்கான பாராட்டு நிகழ்வும், HILL STAR MUSICAL BAND இசை நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றது.
பேரவையின் தற்போதைய பொருளாளர் எம்.மகேஷ்வரன், உப தலைவர் யோகேஸ்வரன். உப செயலாளர் சத்தியநாதன், பிரதி தலைவர் யசோக்குமர்,காப்பாளர் விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.









