இந்தியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொகைதீன் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின்கீழ் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றிபெற்ற நிலையில் தேர்தலுக்குப்பின், தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ளது.
ஐயுஎம்எல் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
அதேபோல சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா இடம்பெற்றார்.
இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) விலகுவதாக அந்தக் கட்சித் தலைவர் காதர் மொகைதீன் அறிவித்துள்ளார்.
