தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விழா இன்றைய தினம் (24-04-2026)பாடசாலை அதிபர் பெரியநாயகம் தலைமையில் நடைபெற்றது .
இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பப் பிரிவு வளாகத்தில் ஆரம்ப பிரிவு பகுதி தலைவி திருமதி சசிகலாவின் நெறிப்படுத்தலில் கீழ் சம்பிரதாய பூர்வமாகக் குத்துவிளக்கு ஏற்றிப் பால் பொங்க வைத்து மாணவர்கள் பங்கு பற்றிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன .
இதில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட புது வருட இனிப்பு பண்டங்களை அனைவருக்கும் கொடுத்து உண்டு மகிழ்ந்தனர்.
பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கெளசல்யா






