தமிழகத்தில் இடைத் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை ஜூலை 31ஆம் திகதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இதையும் படியுங்கள்: உலகத் தமிழ் மாநாடு நடத்த தமிழக புதிய அரசு தயார்
இந்தத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இடைத்தேர்தலைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு, மத்திய அரசு, சட்டப்பேரவைச் செயலர் மற்றும் முதல்வர் விஜய் ஆகியோர் பதிலளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
