இஸ்லாமிய உறவுகளுக்கு அமைதி, சமாதானம், செழிப்பு நிறைந்த இனிய ரமழான் பெருநாள் நல்வாழ்த்துகள்! – ஜீவன் தொண்டமான்.
புனித ரமழான் மாதத்தை நிறைவு செய்து கொண்டாடப்படும் இந்த மகிழ்ச்சியான பெருநாள், தியாகம், பொறுமை, கருணை மற்றும் பகிர்வு போன்ற உயர்ந்த மனிதநேய மதிப்புகளை நமக்கு நினைவூட்டுகின்றது.
நோன்பின் மூலம் மனிதன் தன்னைச் சீரமைத்து, ஆன்மீக வளர்ச்சியையும் அடைந்து, பிறர் துன்பங்களை உணர்ந்து உதவும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த புனித மாதம் திகழ்கிறது. மேலும், இது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் வலுப்பெறும் காலமாகவும் அமைகிறது.
இ.தொ.கா பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த புனித நாளில் உங்கள் இல்லங்களில் அமைதி நிலவட்டும்; உங்கள் இதயங்களில் அன்பும் நம்பிக்கையும் பெருகட்டும். நீங்கள் கடைப்பிடித்த நோன்புகளும் தொழுகைகளும் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நலன், வளம் மற்றும் ஆரோக்கியம் கிட்டட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
