அரிய வகை மிருகமான மீன்பிடிப் பூனையின் (கொடுப்புலி) இறந்த உடல் கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் இன்று (05) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Fishing Cat எனப்படுகின்ற இந்தக் கொடுப்புலி (மீன்பிடிப்பூனை -இலங்கை வழக்கு) ஒன்றின் சடலத்தை தோட்டத் தொழிலாளர்கள் கண்டு உரிய அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த பூனையின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை. அஃது எவ்வாறு உயிரிழந்தது என்பதும் தெரியவில்லை.
இது குறித்து கினிகத்தேனை பொலிஸார் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற நல்லதண்ணி வனத்துறை அதிகாரி ஆர் எம் பி ரத்நாயக்க குழுவினர் கொடுப்புலியின் உடலை மீட்டு ரந்தெனிகல மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்ள்ளனர்..
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


