கிலண்டில் தோட்டத்தில் ஆணின் சடலம் ஒன்று இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, கிலண்டில் தோட்ட பிரேமா பிரிவில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாராவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவின் பணிப்புரைக்கு அமைய மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிசார் கிலண்டில் தோட்ட பிரேமா பிரிவிற்கு சென்றனர்.
மின்வேலியில் சிக்கியவர் மரணம்: சாமிமலையில் சம்பவம்
பொலிஸாரால் கிலண்டில் தோட்டத்தில் ஆணின் சடலம் மீட்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், இறந்தவர் மஸ்கெலியா நகரில் உள்ள பேருந்து நிலைய வீதியில் வசித்த பரமேஸ்வரன் (வயது 48) என அடையாளம் காணப்பட்டடார்.
சடலம் ஹட்டன் பொலிஸ் நிலைய ( சொக்கொ ) கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்த்த பின்னர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடட் கூற்று பரிசோதனை செய்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்
