மின் வேலியில் சிக்கியவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (06) காலை சாமிமலை மீட்டியாகொடையில் இடம்பெற்றுள்ளது.அங்குள்ள விவசாய நிலத்தில் மின் வேலியில் அவர் சிக்கியுள்ளார்.
சாமி மலை பெயர்லோன் தோட்ட சின்ன சூரிய கந்தை பிரிவில் வசிக்கும் மாரிமுத்து கந்தசாமி (வயது 62) என்பவரே உயிரிழந்தவராவார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இன்று காலை 9 .30 அளவில் பணிக்காக அதே பகுதியில் உள்ள மீட்டியாகோட்டை பகுதியின் விவசாய நிலத்திற்குச் சென்ற போது அங்கு மின்சாரம் தாக்கியுள்ளது.
படுகாயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு வரும் வேளையில் மின் வேலியில் சிக்கியவர் மரணம் அடைந்தார்.
மாரிமுத்துவின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
