மறே தோட்டத்திலிருந்து கதிர்காமம் செல்லும் 4ஆவது குழு இன்று (06) தனது யாத்திரையை ஆரம்பித்தது.
மஸ்கெலியா மறே தோட்ட பகுதியில் இருந்து, நல்லதண்ணி மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் நான்காவது குழு
இன்று 06 ஆம் திகதி பாதயாத்திரையை ஆரம்பித்தது.
மறே, நல்லதண்ணி, மஸ்கெலியா பகுதிகளில் இருந்து சுமார் 70 இற்கு மேற்பட்ட யாத்திரிகர்கள்கொண்ட குழு இன்று பிற்பகல் கதிர்காம பாதயாத்திரையை ஆரம்பித்தது.
இவர்கள் இன்று நடை பயணமாக நோர்வூட் டிக்கோயா நகரை அடைந்து அங்கு உள்ள அம்மன் ஆலயத்தில் தங்கி நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.
நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து ரதல்ல வரை சென்று ரதல்ல ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலையில் மீண்டும் யாத்திரை ஆரம்பித்து பொரகஸ் ஆலயம் வரை செல்வர்.


அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து வெளிமடை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பர்.
ஆலயங்களில் தங்கித் தங்கி மறே தோட்டத்திலிருந்து கதிர்காமம் செல்லும் குழு
டயரபா வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் கும்பல் வளை வரை சென்று அங்கு உள்ள காளி கோயில்களில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பர்.
வெள்ளவாய வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை எத்தில் வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்குவர்.
மஸகெலியாவில் கதிர்காமம் யாத்திரை ஆரம்பம்
மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து குடாவெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பர்.
லுனுகம் வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை கதிர்காமம் சென்றடைவார்கள் என யாத்திரை குழுத் தலைவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர். செ. தி.பெருமாள்.
