மஸ்கெலியாவில் கதிர்காமம் யாத்திரை இன்று பிற்பகல் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது.
இன்று 04 ஆம் திகதி செல்வம் தலைமையில் மறே, நல்லதண்ணி, சாமிமலை, மஸ்கெலியா பகுதிகளில் இருந்து சுமார் 50 இற்கு மேற்பட்ட யாத்திரிகர்கள் கொண்ட குழு ஆரம்பித்தது.
இன்று கொட்டும் மழையிலும் மஸ்கெலியாவில் கதிர்காமம் யாத்திரை நடை பயணமாக நோர்வூட் டிக்கோயா நகரை அடைந்து அங்கு அம்மன் ஆலயத்தில் தங்கி, நாளைக் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.
நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து ரதல்லை வரை சென்று ரதல்லை ஆலயத்தில் தங்கி,மறுநாள் காலையில் மீண்டும் யாத்திரை ஆரம்பித்து பொரகஸ் ஆலயம் வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்குவர்.

மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து வெளிமடை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி,மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து டயரபா வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்குவர்.
மறுநாள் காலை மீண்டும் கும்பல்வளை வரை சென்று அங்கு உள்ள காளி கோயில்களில் தங்கி இருந்து, மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து வெல்லவாயா வரை செல்வர்.
அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து, மறுநாள் காலை எத்தில் வெகரை வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி,மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பர்.
குடாவெகரை வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து லுனுகம்வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்குவர.
அந்கிருந்து மறுநாள் காலை கதிர்காமம் சென்றடைவார்கள் என யாத்திரை குழுத் தலைவர் செல்வகுமார் தொரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
