கந்தப்பளை நிருபர் ரமேஷ் காலமானார். நுவரெலியா , கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஆ. ரமேஷ் காலமானார்.
அன்னாரின் மறைவு ஊடகத் துறைக்கு மட்டுமன்றி, அவரை அறிந்த அனைவருக்கும் பேரிழப்பாகும்.
ஊடகப் பணியில் அவர் ஆற்றிய சேவைகளை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்.
இதையும் படியுங்கள்: மின் வேலியில் சிக்கியவர் மரணம்: சாமிமலையில் சம்பவம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, துயரத்தில் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள்,நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாக நுவரெலியா மாவட்ட நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னாருக்கு மலைக்குருவியின் அஞ்சலி.
