இரத்தினபுரி மாவட்ட தமிழ் மொழி மூல முன்னாள் ஆசிரியர் பி. இரஞ்சித் ஜெயகர் எழுதிய’காலம் மறந்த கதை’ என்ற நூல் காவத்தையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
எழுத்தாளர் மல்லிகைப்பூச்சந்தி திலகராஜ் தலைமையில் காவத்தையிலுள்ள அரங்கசாலாவை உற்சவ மண்டபத்தில் மிக எளிமையான முறையில் நூல் வெளியிடப்பட்டது.
முன்னாள் அதிபர்கள், இந்நாள் அதிபர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.


இரத்தினபுரி எஸ்.ஆர்.இரவீந்திரன்
