பாராட்டு விழாவும் சின்னம் சூட்டுவிழாவும்

பாராட்டு விழாவும் சின்னம் சூட்டுவிழாவும்

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் வத்தேகம கல்வி வலயத்தில் பன்விலை கல்விக் கோட்டத்தில் அமைந்துள்ள பெருந்தோட்ட பாடசாலையான ஆத்தளை தமிழ் வித்தியாலய பாடசாலை வரலாற்றிலே முதன் முறையாக இவ்வாண்டு தமிழ்மொழித்தின போட்டிகளில் வலய மற்றும் மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்று தேசிய மட்ட கவிதை ஆக்கப் போட்டிக்கு தெரிவாகியுள்ள செல்வி P.கனிஷ்காவிற்கான பாராட்டு விழாவும் மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் விழாவும் அதிபர் திருமதி S.செல்வகுமாரி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வத்தேகம வலய கல்வி பணிமனையின் முன்னால் மேலதிக கல்விப்பணிப்பாளர் I. ஹாசிம் , அவர்களும் சிறப்பு அதிதியாக வத்தேகம வலய கல்வி பணிமனையின் உதவி கல்விப் பணிப்பாளர் திரு A. ரஹிம், ஆசிரிய ஆலோசகர் திருமதி K.கோபாலகிருஸ்ணன் மற்றும் நலன்விரும்பிகளான பன்விலை பிரதேச தொழிலதிபர் Y. பிரபாகரன், பன்விலை பிரதேச தொழிலதிபர் காமினி…

கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி

கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதி சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி

மஸ்கெலியா – கார்ட்மோர் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியை அடுத்த ஆண்டுக்குள் சுற்றுலாத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். கார்ட்மோர் நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு கண்காணிப்பு விஜயமொன்றில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு கூறினார். சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இத்தகைய பகுதிகளை உருவாக்குவதன் மூலம், அந்த பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். பல்வேறு நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இந்தப் பகுதியை சுற்றுலாத் தளமாக உருவாக்க எதிர்பார்க்கப்படடுள்ளது. இந்த பகுதிக்கு தற்போது பல சுற்றுலாப் பயணிகள் வந்த சென்றாலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் அங்கு இல்லை. அங்கு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இடங்களையும் நிர்மாணிக்க முடியும். இதுபோன்ற நவீன வசதிகளை இங்கு உருவாக்குவதற்கு அடுத்த பாதீட்டிலிருந்து நிதி ஒதுக்குவோம். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வீதியை…

நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு

நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு

நுவரெலியா போலீஸ் நிலையத்தின் அரையாண்டு ஆய்வு நுவரெலியா சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளரின் தலைமையில் நடத்தப்பட்டது. வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும் நுவரெலியா காவல்துறையின் அரையாண்டு ஆய்வு அண்மையில் நுவரெலியா நகராட்சி மன்ற மைதானத்தில் நுவரெலியா சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அனுருத்த பண்டார ஹக்மான தலைமையில் நடைபெற்றது. இந்த அரையாண்டு ஆய்வு நுவரெலியா தலைமையக தலைமை காவல் ஆய்வாளர் திரு. பிரேமலால் கெட்டியாராச்சி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நுவரெலியா காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து பிரிவுகளின் தலைவர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் மேற்பார்வையிடப்பட்டனர். இதன் பின்னர் சிரேஷ்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அனுருத்த பண்டார ஹக்மானவும் காவல் நிலையத்திற்குள் மேற்பார்வை நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள்

வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள்

வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள் மக்களுக்குக் கடும் துன்பத்தைத் தருவதாக கினிகத்தேனைப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாகவும், தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை, சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதேவேளை, நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில் சிக்கியதாக நோர்வூட்…

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ

கம்பளை குடைத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (28) இரவு இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கண்டி- நாவலப்பிட்டி வீதியில் கம்பளை நகரில் அமைந்துள்ள குடைத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்தினால் தொழிற்சாலைக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ

ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ

ஹற்றன் செல்லாமல் கால்வாயில் கவிழ்ந்த ஓட்டோ ஒன்று கொட்டகலை கமர்ஷல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஹட்டன் நகர் நோக்கி சென்ற முச்சக்கவண்டி கொட்டகலை பகுதியில் வீதியை விட்டு விலகிக் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேற்று (27) பிற்பகல் 1:00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார், அதிவேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டுப் பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்து கால்வாய்குள் விழுந்ததாகத் தெரிவித்தனர். இந்த விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளது. க. கிருஷாந்தன்

திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம்

திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம்

திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டகலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்திச் செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது பிள்ளையே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டுப் பிள்ளையின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, பிள்ளை வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (26)) இடம்பெற்றுள்ளது. பின்னர் பிள்ளையைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார், பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுக் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப்…

முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார்

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் தயாரட்ன காலமானார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பி. தயாரத்ன 89ஆவது வயதில் இன்று (25) காலை காலமானார். நீண்டகால அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த பி. தயாரத்ன, சுகாதாரம், ஊட்டச்சத்து, நலன்புரி அமைச்சராகவும் வேறு பல முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். தனது பணித்திறன், மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பால், பலராலும் மதிக்கப்பட்ட அரசியல்வாதியாகத் திகழ்ந்தார்.

மலைநாட்டில் நிரம்பி வழியும் நீர்த்தேங்கங்கள்

மலைநாட்டில் நிரம்பி வழியும் நீர்த்தேங்கங்கள்

மலைநாட்டில் நிரம்பி வழியும் நீர்த்தேங்கங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் இன்று காலை முதல் நிரம்பி வழிகின்றது. அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்

மீமுறே விபத்தில் நால்வர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (19) மாலை வேன் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்தில் சிக்கிய வேன், அதிக வளைவு கொண்ட பிரதான வீதியின் மேல் வளைவிலிருந்து கீழ் வளைவு வரை 30 மீற்றர் கவிழ்ந்து மீண்டும் பிரதான வீதியில் குடைசாய்ந்துள்ளது. விபத்தில் இறந்தவர்களில் மூன்று பெண்களும் ஆண் ஒருவரும் அடங்கின்றனர். அதேநேரம், விபத்தில் குழந்தையொன்று படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் வேனில் 6 பேர் இருந்துள்ளதுடன், வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.