வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை

வத்தளையில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை, ஹேகித்தை அல்விஸ்வத்தை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர், வசித்து வந்த இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில், முகமூடி அணிந்த நால்வர் முச்சக்கர வண்டியில் வந்து, வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். சம்பவத்தின் போது, உயிரிழந்தவரின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வீட்டில் இருந்துள்ளனர் என தெரிய வருகிறது. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 43 வயதான இந்த நபர், சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், 2023 ஆம் ஆண்டு மஹாபாகே பகுதியில் இடம்பெற்ற ஒரு சுட்டுக்கொலைச் சம்பவத்தில், இவர் உதவியவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம்…

தெமோதரை பாலம் கவர்ச்சிக்கு மாறுகிறது

தெமோதரை பாலம் கவர்ச்சிக்கு மாறுகிறது

எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொப்பித்தோட்டம் தங்கா

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து

ஹற்றன் சப்பாத்துக் கடையில் தீவிபத்து இன்று பகல் ஏற்பட்டது. ஹட்டன் பிரதான நகரில் தனியார் காலணி கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது . இன்று (18) பிற்பகல் 1:00 மணியளவில் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது . கடை மூடப்பட்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட தீ வேகமாக பரவியது, மேலும் ஹட்டன் டிக்கோயா மாநகரசபை தீயணைப்புப் பிரிவு ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ஏராளமான காலணிகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள காலணிகள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. தீ விபத்தினால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலணிகள் எரிந்ததால் எழுந்த துர்நாற்றத்தால், பகுதிவாசிகள் சிரமப்பட்டனர். ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை…

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று

ஆடி மாதம் முதலாந்திகதி இன்று: மாதங்கள் பன்னிரெண்டு, அதில் தமிழ் மாதங்களின் நான்காவதாக வரும் ஆடி விசேட சிறப்புக்களை கொண்டது. ஆடிமாதம் முதலாம் திகதி தெட்சணாயன காலம் ஆரம்பமாகிறது. ஆண்டினை இரண்டு அயனங்களாகப் பிரிப்பர். அயனங்கள் என்பது கதிர்நகர்வு ஆகும். தைமுதல் ஆனி வரையான காலம் உத்தராயணம் என்றும் (வடதிசை நகர்தல்) ஆடி முதல் மார்கழி வரையான காலம் தெட்சணாயனம் (தென் திசை நகர்தல்) என்றும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் தேவர்களுக்கு பகற்பொழுதாகவும் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரையுள்ள காலம் இரவுக் காலமாகவும் கருதப்படுகின்றது. ஆடி மாதம் முதல் திகதியில் தேவர்கள் பூவுலகம் வருவதாக ஐதீகம். இதனால் தான் மக்கள் ஆடிமாதம் முதலாம் திகதியை மகிழ்வுடன் வரவேற்கிறார்கள். ஆடிமாதம் ஒரு மாதமும் சுப…

தபால்காரன் இல்லாமல் தத்தளிக்கும் கடிதங்கள்

தபால்காரன் இல்லாமல் தத்தளிக்கும் கடிதங்கள்

நேரடித் தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் தமக்கு அந்தச் சேவையைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். கண்டி பன்விலை கலாபொக்க அரச பெருந்தோட்ட யாக்கத்தினால் நிருவகிக்கப்படும் தோட்டங்களுக்கு நேரடித் தபால் விநியோகம் இல்லை. இதனால், தோட்டப்புற மக்களும் அங்கிருக்கும் கற்ற இளைஞர் யுவதிகளும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். தோட்டக் காரியாலயங்களில் தமக்குரிய தபால்கள் தேங்கிக்கிடப்பதாலும் உரிய நேரத்திற்கு அவசர கடிதங்களும் ஆவணங்களும் கிடைக்கப் பெறாமையாலும் காலாகாலமாக பல்வேறு வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. இவ்வாறு முக்கியக் கடிதங்கள் தோட்டப்புற இளைஞர் யுவதிகளுக்குக் கிடைக்கப் பெறாமல் சொல்லொணா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகப் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மடுல்கலை தபால் நிலையத்தினரால் விநியோகிக்கப்படும் கடிதங்கள், ஆவணங்களை விநியோகிப்பதற்கு நேரடித் தபால் விநியோக ஏற்பாடுகள் அங்கில்லை. இதன் காரணமாகத் தோட்ட நிர்வாகத்தால் கையேற்கப்படும் தபால்கள் பிரதான தோட்டக் காரியாலயத்தில் தேங்கிக் கிடக்கின்றன.…

பணிப்பாளர் மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு

பணிப்பாளர் பதவியிலிருந்து மௌலவி ஓய்வு

மத்திய மாகாண வத்துகாமம் கல்வி வலயத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். ‪எதிர்வரும் 22.072025‬ அன்று தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அவர், ‪1965 .07 .22‬ ஆம் திகதி அனுராதபுர மாவட்டம் கிரிப்பாவ என்னும் கிராமத்தில் பிறந்தார். இப்ராஹிம் அலிமா உம்மா ஆகியோருக்குப் புதல்வராக அவதரித்த இவர் ஆரம்பக் கல்வியைத் துருக்குராகம முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றார். தொடர்ந்து இடைநிலைக் கல்வி மற்றும் மௌலவி கற்கை நெறியை மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் கற்றுப் பட்டம் பெற்றார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அந்தப் பல்கலைக் கழகத்திலேயே முதுமாணி பட்டத்தையும் பெற்றார். ஆரம்பக் கல்வி ஆசிரியராக 1990 ஜனவரி ஒன்றில் தான் கற்ற துருக்குராகம முஸ்லிம் வித்தியாலயத்திலேயே கடமையை ஏற்று தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றார்.…

பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர்

பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர்

பௌர்ணமிக்கு போத்தல்களுடன் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினரால் நேற்று லிந்துலையில் கைதுசெய்யப்பட்டார். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சந்தேகத்தில் மதுபான போத்தல் ஒரு தொகையுடன் அந்த இளைஞரை நேற்று நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்ததாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் போயா தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் அந்த நபரிடமிருந்து 30 முழுப் போத்தல்களும், 96 கள்ளு போத்தல்களும், மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபரை மதுபான போத்தல்கள் சகிதம் இன்று நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை! எங்களுக்கே உண்டு என்று சொல்வதைப்போல அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். எதிரணி உறுப்பினர் ஹேக்டர் அப்புபுஹாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு அமைச்சர் தமிழில் பதில் அளித்திருக்கிறார். அதனைக் கேட்டு உரைபெயர்ப்பாளர் எப்படி பெயர்த்தாரோ தெரியவில்லை, தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் பதிலை சபையில் சமர்ப்பியுங்கள் நான் பெற்றுக்கொள்கிறேன் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார். இந்த நேரத்தில்தான் சற்றுக் குழப்பம். அமைச்சர் தமிழில் சொன்ன விளக்கம், உரை பெயர்த்தவருக்குப் புரியவில்லையா, அல்லது அமைச்சர் தனது தனித்துவத் தமிழில் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற்போனதா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இங்கு ஒரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். அமைச்சர் சொல்கிறார் எனது தாய்மொழி தமிழ். நான் தமிழில்தான் பதில் அளிப்பேன் என்று. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. மொழி என்பது…

ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல?

ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல?

கல்விச் சுற்றுலாவுக்கு ஏன்னை ஏன்டா கூட்டிட்டுப் போகல? என்று கேட்டுப் பாடசாலை மாணவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா – பூந்தோட்டம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவன் தன்னை கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லாமை மன ரீதியாகப் பாதிப்படையச்செய்வதாகத் தெரிவித்து வலய கல்வி அலுவலகம் முன்பாக சாத்வீக போராட்டத்தை மேற்கொண்டார். இந்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளார். மேலும், பெற்றோரின் சம்மதக் கடிதமும் வழங்கியிருக்கிறார். எனினும், மாணவனை மட்டும் சுற்றுலலாவுக்கு அழைத்துச் செல்லாமல் விட்டுச் சென்றதால், அவர் ஆத்திரமுற்று கல்வி அலுவலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம்

வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம்

வத்துகாமம் பஸ் விபத்தில் எண்மர் காயம் அடைந்து வத்தேகம மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கண்டி வத்துகாமம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்துக்கு சொத்தமான பஸ் ஒன்று இன்று காலை 10.45 அளவில் விபத்துக்குள்ளானது. வத்துகாமத்திலிருந்து இருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ் “அரலிய உயன”பகுதியில் விபத்துக்குள்ளானதில் எண்மர் சிறு காயங்களுக்குளாகிய நிலையில் வத்துகாமம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தின் போது பஸ்சில் 15 பேர் பயணித்துள்ளனர். விபத்துக்கான விசாரணைகளை வத்துகாமம் பொலிசார் முன்னெத்து வருகின்றனர் .