அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்க எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவிப்பு

அபிவிருத்திக்கு உதவ எக்ஸிம் வங்கி

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். அதன்போது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்ய முடியாது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவென இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இங்கு 28 குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதா ஆணைக்குழு அறிவித்துள்ளது.