ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் திகதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம்…
Author: Malaikuruvi
இன்று 100 மில்லிமீற்றர் மழை!
இன்று 100 மில்லிமீற்றர் மழை!: நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும்
மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும் என்று இரத்தினபுரி பிரதேச சபைத் தேர்தலில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடும் கே. பாபு கண்ணன் தெரிவித்தார். பிரதேச மக்களுக்கு சேவையாற்ற ஆளும் கட்சியே உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாபு கண்ணன் கூறினார். ஹப்புகஸ்தன்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாபு கண்ணன் இவ்வாறு கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பொதுஜன ஐககிய முன்னணியில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் போட்டியிடும் பாபு கண்ணன் மேலும் உரையாற்றுகையில்: நான் போட்டியிடும் வட்டாரத்தில் ஆளும் கட்சிவெற்றி பெற்றால் மாத்திரமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். மக்களுக்குச் சேவையாற்ற பிரதேச சபைகளில் ஆளுங்கட்சியால் மாத்திரமல்ல. எதிர்க் கட்சியாலும் சிறந்த சேவையாற்ற முடியும். எல்லா உறுப்பினர்களுக்கும்…
முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி
முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள். புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.
காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்
காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர்.
பிரியசாத் படுகொலை:மூவர் கைது
பிரியசாத் படுகொலை:மூவர் கைது: சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தகவல் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார. டான் பிரியசாத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இருவருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச்சூடுபட்ட பிரியசாத் ஆபத்தான நிலையில்
துப்பாக்கிச்சூடுபட்ட பிரியசாத் ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டான் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்த பொலிஸார், பிரியசாத் சாகவில்லை என்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் வௌிநாட்டவர்கள் இருவரும் இந்திய கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. சம்பவத்தைக் கேள்வியுற்ற பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தனது சவூதி அரேபிய விஜயத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஶ்ரீநகர் சென்றிருக்கிறார்.
சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!
சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!: கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 3 பேரும் நலமுடன் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை பிரிவு தெரிவித்து உள்ளது.
காணி நிலம் வேண்டும் தேமசக்தி!
காணி நிலம் வேண்டும் தேமசக்தி!: மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மைகவே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காணி நிலம் வேண்டும் பரா சக்தி காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடியதைப்போன்று திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு, ‘அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீது…