நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டினா பிபா உலகக் கோப்பை போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
பிபா உலகக் கிண்ணத் தொடரின் பரபரப்பான இரண்டாவது சுற்று ஆட்டத்தில், கேப் வெர்டே அணியை வீழ்த்தி நடப்பு செம்பியனான ஆர்ஜென்டினா சுற்று16 தகுதிச் சுற்று நிலைக்கு முன்னேறியுள்ளது.
உலகக் கோப்பை நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். இது உலகக் கிண்ண வரலாற்றில் அவரின் 20ஆவது கோலாகும்.
இந்நிலையில்,கேப் வெர்டே அணியின் டெராய் டுவார்டே கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.
உலகக் கிண்ண கால் பந்து தொடரிலிருந்து வெளியேறியது ஜேர்மனி
கூடுதல் நேரத்தில் ஆர்ஜென்டினாவின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஒரு கோல் அடிக்க, உடனடியாக கேப் வெர்டேவின் சிட்னி லோப்ஸ் கப்ராலின் அற்புதம் வாய்ந்த லாங்-ரேஞ்ச் கோல் மூலம் ஆட்டம் மீண்டும் 2-2 என சமநிலையானது.
கூடுதல் நேரம் முடிவடைய 10 நிமிடங்கள் இருந்தபோது, மெஸ்ஸி உதைத்த கார்னர் பந்து கேப் வெர்டே வீரர் போர்ஜஸின் மீது பட்டு சொந்த இலக்காக மாறியதால் ஆர்ஜென்டினா வெற்றி பெற்ற்றுள்ளது.
முதன்முறையாக உலகக் கிண்ணத்தின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற எகிப்து அணி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியை 1-1 எனச் சமன் செய்துள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி வெற்றியை முடிவு செய்யும் முறையில் 4-2 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி, எகிப்து அணி வரலாற்றுச் சாதனையாக சுற்று-16 க்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
