பொல்பிட்டி தகம்பிட்டி பள்ளேவத்தை பகுதியில் உள்ள வீடுகளின் மீது பாறைகள் விழும் அபாயம் காரணமாக, ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகப் பொல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
லக்ஷபானை பிரதான சாலைக்கு மேலாக உள்ள பாரிய கற்பாறைகள் சரிந்துவிழும் அபாயம் உள்ளதால்,இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்று (16) இரவு கூறினார்.
நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பள்ளேவத்தை சனசமூக நிலையத்திலும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த அறுவர் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்
