ஹற்றன்– கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் இன்று (16) காலை லொறி ஒன்றும் பிக்-அப் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் லொறியில் பயணித்த ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கொழும்பிலிருந்து ஹற்றன் நோக்கிப் பயணித்த லொறியும் ஹற்றனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பிக்-அப் வண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.


ஜீப் வண்டி தனக்கு முன்னால் பயணித்த கார் ஒன்றுக்கு வழிவிட முற்பட்டபோது, எதிர்த் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்.எப்.எம்.சுஹெல் – நுவரெலியா
