இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தனது பகிரங்கமான கருத்து வேறுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தனது ஆதரவு இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் இணைந்து ஜி7 உச்சிமாநாட்டில் உரையாற்றிய டிரம்ப், “அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது. நான் இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது, ஏனென்றால் நான் செய்ததைச் செய்ய வேறு எந்த அதிபரும் முன்வரவில்லை” என்று கூறினார்.
தான் தலையிட்டிருக்காவிட்டால், இஸ்ரேலை எப்போதோ முடித்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட திரு. டிரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு பொறுமையுடன் செயற்பட வேண்டும். லெபனான் மீதான தாக்குதல் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். அஃது ஈரானுடனான அமைதி உடன்பாட்டைக் கெடுத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
