நாடடின் 78 வது சுதந்திர தினத்தையொட்டி சூரியன் அதிரடி நற்பணி மன்றத்தால் திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் சூரியன் அதிரடி நற்பணி மன்றம் அபிவிருத்தி குழு இணைந்து நடைபெற்ற மரம் நடு நிகழ்வு சுற்றுச்சூழலை பாதுகாப்போம் இலங்கையை வளமான நாடாக உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் பிரதி அதிபர் திரு, குமரன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சூரியன் அதிரடி மன்றம தலைவர் ராஜ்குமார், செயலாளர் மாரிமுத்து மற்றும் சசிகலா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்



