நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை நானோயா பிரிவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.15 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் மஹா கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து கங்கா தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு, பட்டண பிரவேசம். நந்தி கொடியேற்றம் நடைபெறுவதோடு மாலை 5.00 மணிக்கு சாந்தி கிரியைகள் நடைபெறும்.
29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.00 மணிக்கு நர்த்தன கணபதி சோடஷ உபஷார பூஜையுடன் கிரியைகள் ஆரம்பமாகி காலை 7.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை அடியார்கள் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு. மாலை 5.00 மணி முதல் தருண கணபதி வழிபாடு புண்ணியாக வாஜணம் யாகசாலை கிரியைகள் என்பன இடம்பெறும்.
30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு சக்தி கணபதி வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி மங்களகரமான விசுவாவசு வருஷம் தை திங்கள் 16 ஆம் நாள் ஆருத்திரா நட்சத்திரமும். மீன லக்கினமும். சித்த யோகமும் கூடிய காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வரும் சுப முகூர்த்த சுப வேளையில் ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையுடன் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
கிரியைகள் யாவும் ஆலய பிரதம குரு கிரியாமணி அலங்கார பூஷணம் ஸ்ரீ சபரிவாஷன் ஹரிஹர பிரியன் பீடாதிபதி சிவஸ்ரீ.சந்திரகாந்த் குருக்கள் ஒருங்கிணைப்பில் பிரதிஷ்டா பிரதம குருவாக கொட்டகலை நகர் அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் பிரதமகுரு அகில இலங்கை ஐக்கிய இந்து குருமார் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் ஸ்ரீவித்யா வேத பாடசாலையின் அதிபர் சாகித்திய சிரோன்மணி தற்புருஷ சிவாச்சாரியார் சிவஸ்ரீ.ஸ்கந்தராஜ குருக்கள் தலைமையில் நடைபெறும்.
இக் கும்பாபிஷேக கிரியைகளில் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவருளை பெற்றுக் கொள்ள அனைத்து அடியார்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள்
ஆலய நிர்வாக சபையினர்கள். தோட்ட தலைவர்கள். தோட்ட நிர்வாகத்தினர்கள்.
இளைஞர் நற்பணி மன்றம். மகளிர் மன்றம் கொழும்பு செட்டியார் தெரு வர்த்தக பெருந்தகைகள்.
கெளசல்யா
