றீ பில்டிங் ஶ்ரீலங்கா நிதியத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நிதி உதவி வழங்கியுள்ளனர்.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 35 இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்திடம் அவர்கள் நேற்று (11) நிதியத்திற்கான காசோலையைக் கையளித்தனர்.
இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, இன்று காசோலையை அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.
கொழும்பில் உள்ள தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான கொரிய தூதுவர் Lee Miyon, சுவிட்சர்லாந்து தூதுவர் Dr. Siri Walt,பலஸ்தீன தூதுவர் Ihab I.M. Khalil, மாலைதீவு உயர் ஸ்தானிகர் Masood Imad, ஓமான் தூதரகத்தின் பணிக்குழாம் பிரதானி Said Al Harbi, இத்தாலிய தூதரக பிரதித் தலைவர் Alberto Arcidiacono ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
