சிவனொளிபாத மலை உச்சியில் மண் திட்டுகள் சரியும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி இரவு பெய்த மழையில் சிவனடி பாத மலை உச்சியில் மண் திட்டுகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள் கழிவுப் பொருட்கள் போடப் படுவதால் மண் திட்டுகள் சரிந்து விழுந்ததன.பல ஆயிரம் ஆண்டுகள் பாதுகாத்து வந்த இந்தச் சிவனடி பாத மலையை எமது சந்ததிக்கும் விட்டுச் செல்ல வேண்டும்.
ஆகையால் இனிவரும் காலங்களில் சிவனடி பாத மலைக்குச் செல்லும் அனைத்து பக்தர்களும் பொலித்தீன் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உக்கா பொருட்கள் கொண்டு செல்வது முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன், சிவனடி பாத மலைக்குப் பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தேரர் ஆகியோர் ர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்


