மஸ்கெலியா குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள 120 குடும்பங்களுக்கு 120 மில்லியன் ரூபாய் செலவில் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கும் முகமாக நேற்று 12 ஆம் திகதி மதியம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கிருஷ்ணன் கலைச்செல்வி மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோர் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
தலா ஒரு குடியிருப்புக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டம் தேசிய நீர் வழங்கல் திணைக்களம் ஊடாக நேற்று ஆரம்பிக்க பட்டடது.
இதற்கான சுத்தமான குடிநீர் கிளன்டில் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் தாங்கி யில் இருந்து இயந்திரம் ஊடாக குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் பகிர்ந்து அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
குடா மஸ்கெலியா கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் நீர் தாங்கி அமைக்கப் பட்டு அந்த நீர் தாங்கி யில் இருந்து நீரை வழங்கும் திட்டம் இடம் பெற்று வருகிறது.
இந்த வேலைத் திட்டம் 2015 ஆம் ஆண்டு அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தால் ஆரம்பிக்க பட்டு அதற்கான நீரக் குழாய்கள் இப் பிரதேசத்திற்குக் கொண்டு வந்த போதும் தேசிய நீர் வழங்கல் சபையால் இடை நடுவில் இந்த வேலைத் திட்டம் கைவிடப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்.
