மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவ முகாம் இன்றைய தினம் (13.03.2026.) காலை கூட்டுறவு சங்கத்தில் பணி புரியும் யுவதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி, அங்கு பணிபுரியும் தாதியர்கள், கிளங்கன் ஆதார வைத்திய சாலை வைத்திய அதிகாரி, இரத்த வங்கி தாதியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டனர். அத்துடன் இரத்த தானம் நிகழ்விலும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.


