சிவனொளிபாத மலைக்கு வந்து தரிசனம் செய்த பின்னர் மீண்டும் நுவரெலியா திரும்பிச் செல்கையில் அவர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததால் மூவர் காயமடைந்தனர்.
நுவரெலியா பகுதியில் இருந்து நேற்று 12 ஆம் திகதி சிவனடி பாத மலைக்கு சென்று தரிசனம் செய்த பின்னர் மீண்டும் தங்களது வீட்டிற்கு இன்று மாலை 4.30 மணிக்கு திரும்பிய வேளையில் மஸ்கெலியா ஹட்டன் பிரதான சாலையில் ரொக்வூட் தோட்ட பகுதியில் கார் ஒன்று சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் பள்ளத்தில் கவிழ்ந்ததால் மூவர் காயமடைந்த நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

