மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரி ஜூலை 08 ஆம் திகதி 86 ஆவது அகவையில் கால் பதிக்கின்றது.
அன்றைய தினம் மிக சிறப்பாக கல்லூரி நாளைக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரி 08.07.2026 புதன் கிழமை 86 ஆவது அகவை நாளைக் கொண்டாடும் வகையில் ஹட்டன் கல்வித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி ஏ. சுமதி வழிகாட்டலில், கல்லூரியின் அதிபர் என். பரமேஸ்வரன் தலைமையில் கல்லூரி நாள் நடைபெறுகிறது.
கந்தகட்டி பாடசாலையில் உயர்தரம் பயில மாணவர் அனுமதி
இந்த நிகழ்ச்சியில் வைத்திய கலாநிதி எஸ். கே. நவரட்னராஜா, சுப்பிரமணியம் ரமேஷ் குமார், இளைப்பாறிய கல்வி உதவி பணிப்பாளர் டி. நாகராஜா, கோட்டம் மூன்று பணிப்பாளர் எஸ். மகேந்திரன், உதவிப் பணிப்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
மஸ்கெலியா நிருபர்
