பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதி தாழிறங்கி அபாயத்தில் உள்ளது
கினிகத்தேனை -ஹட்டன் பிரதான வீதியில் உள்ள தியகலை சந்தியில் பஸ் தரிப்பிடத்தில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி புதைந்து உள்ளதால், ஆபத்தான நிலை காணப்பகிறது.
மழை நாள்களில், வீதியில் பாயும் மழைநீர் இந்த உடைந்த இடத்திலிருந்து உள் நோக்கிப் பாய்கிறது. இதனால், பேருந்து தரிப்பிடத்தின் சாலையும் புதைந்துபோகும் அபாயம் உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்,நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
