சலங்கந்தை பகுதியில் இன்று மாலை 4 மணிக்கு வீசிய காற்றில் மரக் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் முச்சக்கர வண்டி சேதமடைந்தது.
இச் சம்பவம் இன்று மாலை டிக்கோயா சலங்கந்தை பட்டல்கலை பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.
சலங்கந்தை பகுதியில் இருந்து பட்டல்கலை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி மீது பட்டல்கலை பிரதான வீதியில் உள்ள வாகை மரக் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுநருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

