கொட்டகலையில் துப்புரவு பணிக்காக களத்தில் இறங்கிய பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளை (15) சிறப்பாக முன்னெடுத்தது.
பொது நிர்வாக, மாகாண சபைகள்,உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கொட்டகலை பிரதேச சபையினால் செயற்படுத்தப்படும் 2026 உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாளையொட்டி, இன்று (15) கொட்டகலை ஈர நிலப்பூமியில் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.



இதில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், உறுப்பினர்களான சிவசாமி பத்மநாதன்,கணபதி கண்ணதாசன்,அமித்த ஆனந்த, கோவிந்தராஜ் நேசமலர்,ரசிக்கா ஜீவனி,விஜயசீலன் சுதர்சன்,செயலாளர் சிவராம் ராஜவீரன், உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
