17 தோட்டங்கள் ஒன்றிணையும் விநாயகா் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் கொட்டகலையில் இலங்கை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியில் உள்ள 17 தோட்ட மக்கள் ஒன்றிணையும் கோலாகல விநாயகா் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் செப்டம்பர் 20 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறுகிறது.

மண்வெட்டி தோட்டத்தின் ஆலய முன்றலில் ஆரம்பமாகும் ஊர்வலத்தில், பெரிய மண்வெட்டி தோட்டம் (KO),சின்ன மண்வெட்டி தோட்டம் (DD),ஸ்டோனி கிளிப் (கல்மதுரை) தோட்டம், ஹரிண்டன் தோட்டம் ,விளாத்தாங்கொடை தோட்டம் (Lockhill),செல்வகந்தை தோட்டம் (Charmers),கிளாத் தோட்டம் (Ethan Side),விக்டன் * பெரிய மூங்கில் தோட்டம் (Forest Creek A),சின்ன மூங்கில் தோட்டம் (Forest Creek B),அந்தோணிமலை (Wellington),ராணிய்யூ (Derry Clare),கொட்டகலை நகரம், பத்தனை நகரம், கியூ சென் ஜோன் டிலரி தோட்டம், கிறிஸ்லாஸ்பாம் K.O ஆகிய 17 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இணைக்கப்பட்டுப் பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை இலங்கை விஸ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது.இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ய. அநிருத்தன் தலைமை தாங்குகிறார்.
விழாவில் சிறப்பம்சமாக சிறப்பு சொற்பொழிவுகளும் 18 ஆம் திகதி இரவு கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் மலையக இசைக்குழுவான FANTACY இசைக்குழுவின் பக்திப் பரவச இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
